சென்னையில் நடைபெற்ற ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டி - தமிழக அரசு ரூ.1 கோடி நிதி உதவி


சென்னையில் நடைபெற்ற ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டி - தமிழக அரசு ரூ.1 கோடி நிதி உதவி
x

தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவரிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார்.

சென்னை,

சென்னையில் நடத்தப்பட்ட ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் போட்டிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிதி உதவியை தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்திடம் வழங்கினார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஏ.டி.பி. சேலஞ்சர் ஆடவர் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் அரசாணையின்படி அரசு நிதி உதவியாக ரூ.1 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கியுள்ளார்.




Next Story