பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விருதுநகர்
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து மகளிர் போலீசார் பள்ளி மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குழந்தை திருமணம், பெண்கள் பாதுகாப்பு உதவி எண்கள் 181 மற்றும் 1098 குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினர். அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியா பாய் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் போலீசார், பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story