தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்


தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 30 March 2023 6:45 PM GMT (Updated: 30 March 2023 6:46 PM GMT)

காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளான வார்டு 1 முதல் 15 வரை உள்ள பகுதிகளில் ஜீரோ வேஸ்ட் நடைமுறைப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் கார்த்திக்சோலை தலைமையில் செயல் அலுவலர் கவிதா முன்னிலையில் பேரூராட்சி உறுப்பினர்கள், சுய உதவிக்குழுவினர், பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள அதன்பின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பின் அப்துல் கலாம் கலைக்குழு உறுப்பினர்களால் நடத்தப்பட்ட பூஜ்ஜிய கழிவு நிகழ்வு, குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரத்தினை பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் வணிக பகுதிகளிலும் மேற்கொண்டனர்.


Next Story