போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x

போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

கரூர்

தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு கல்லூரி முதல்வர் ஹேமா நளினி தலைமை தாங்கினார். தரகம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தலைவர் பிரபாகரன், சிந்தாமணிப்பட்டிபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதையடுத்து கல்லூரி வளாகத்தில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பாலவிடுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி கலந்து கொண்டு பேசினார். இதில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story