மனநலம் காக்கும் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு


மனநலம் காக்கும் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மனநலம் காக்கும் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

ராமநாதபுரம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவ மையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் மன உறுதி காக்கும் மனம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 36 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் இதற்கான விழா காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கலந்து கொண்டார்.அப்போது அவர் தெரிவித்ததாவது:-

பள்ளி மாணவர்களின் மன உறுதியை காக்கும் வகையிலான மனநலம் பேணும் இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல், லட்சிய நோக்குடன் நன்றாக படிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 14416 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்கள் தங்களுடைய கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்றார்.


Next Story