பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு


பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
x

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுமணி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு போலீஸ் பிரிவு கூடுதல் சூப்பிரண்டு பாண்டியன் அறிவுரையின்படி, சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து மற்றும் போலீஸ் குழுவினர் பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் மற்றும் து.களத்தூர் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குழந்தை தொழிலாளர் முறை குறித்தும், உங்கள் பகுதியில் குழந்தை தொழிலாளர் முறை இருந்தால் அதனை ஒழிக்க ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதில் தன்னார்வலர் ஷீபா பாலரியானி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித்திட்ட பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story