சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு ரூ.9½ லட்சம் காணிக்கை வசூலானது
சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில் ரூ.9½ லட்சம் காணிக்கை வசூலானது.
கடலூர்
சிதம்பரம்,
சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள 5 உண்டியல்கள் நேற்று இந்து சமய அறநிலைத்துறை கடலூர் உதவி ஆணையர் சந்திரன் தலைமையில், கோவில் செயல் அலுவலர் ச. சரண்யா, ஆய்வாளர் நரசிங்க பெருமாள் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து, அதில் இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் 9 லட்சத்து 43 ஆயிரத்து 130 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் உண்டியலில் 17 கிராம் தங்கம், 221கிராம் வெள்ளி மற்றும் அமெரிக்க டாலர் 1, சிங்கப்பூர் டாலர் 1, கன்னடா டாலர் 1, ஆகியவையும் இருந்தது தெரியவந்தது.
Related Tags :
Next Story