பீஞ்சமந்தை மலைப்பகுதியில் சாராய வேட்டை


பீஞ்சமந்தை மலைப்பகுதியில் சாராய வேட்டை
x

பீஞ்சமந்தை மலைப்பகுதியில் போலீசார் சாராய வேட்டை நடத்தி 500 லிட்டர் ஊறலை அழித்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் சாராய விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சாராயம் காய்ச்சும் இடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை போலீசார், வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் வனத்துறை இணைந்து அல்லேரி பகுதியில் சாராய வேட்டை நடத்தினர்.

இந்த நிலையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அணைக்கட்டு அடுத்த பீஞ்சமந்தை மலைப்பகுதியில் சாராயவேட்டை நடத்தினர். அதில் 500 லிட்டர் சாராய ஊறல், 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் சாராயம் காய்ச்சியதாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story