நடுரோட்டில் கார் மோதி தூக்கி வீசப்பட்ட பைக் - ஒருவர் பலி...


நடுரோட்டில் கார் மோதி தூக்கி வீசப்பட்ட பைக் - ஒருவர் பலி...
x

நாமக்கல்லில் பைக் மீது கார் மோதியதில் ஒருவர் பலி ஆகியுள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் முத்துகாளிபட்டி பகுதியை சேர்ந்தவர் லோக தாஸ். இவர் தனது வேலையின் காரணமாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது ராசிபுரம் அருகே சாலையை கடக்க முயன்றார். அந்நேரத்தில் சாலையின் எதிரே கார் ஒன்று வந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத லோகதாசை அந்த கார் மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடலானது ராசிபுரம் அரசு மருத்துமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கார் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.


Next Story