"காசி தமிழ் சங்கமத்தை பாஜக உரிமை கொண்டாட முடியாது" - கே.எஸ்.அழகிரி பேச்சு
காசி தமிழ் சங்கமத்தை பாஜக உரிமை கொண்டாட முடியாது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை சத்தியமூர்த்திபவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காசி தமிழ் சங்க நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தாலும், பாஜக அதனை உரிமை கொண்டாட முடியாது. தமிழ்நாடு அறநிலையத்துறை செலவு செய்து 200 பேரை காசிக்கு அனுப்பியுள்ளது.
நியாயமாக தமிழ்நாடு அரசுக்கு தான் பெருமை சேரும். இதில் பாஜக உரிமை கொண்டாட நினைப்பது வாடகை வீட்டுக்கு உரிமை கொண்டாடுவது போல் ஆகும்.
அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும் இயக்கப்போவது மோடி, அமித்ஷா தான். அதிமுக தற்போது பிரதமர் மோடியின் மறு உருவமாக உள்ளது. அதனால் தமிழகத்தில் பழைய வலிமையை அதிமுக பெற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story