போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை
x

திருப்பத்தூர் பா.ஜ.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் பா.ஜ.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.

பா.ஜ.க. பிரமுகர் கொலை

திருப்பத்தூர் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கலி கண்ணன் (வயது 52), பா.ஜ.க. நகர துணைத் தலைவரான இவர் நேற்று காலை ஊத்தங்கரை- சேலம் சாலையில் வேட்பாளம்பட்டி அருகே கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் டி.ஐ.ஜி. சத்யபிரியா, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். மாலையில் கலிகண்ணன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு திருப்பத்தூர்க்கு கொண்டுவரப்பட்டு அவரது வீட்டில் வைக்கப்பட்டது. அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கலி கண்ணன் உடல் இறுதி ஊர்வலம் நடந்த பாதை முழுவதும் கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர்.

பா.ஜ.க. பிரமுகர் கொலை சம்பவம் திருப்பத்தூர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முற்றுகை

பா.ஜ.க. மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, பட்டியலின மாநிலத் தலைவர் தடா பெரியசாமி, மாநிலச் செயலாளர் வெங்கடேசன், மாவட்டத் தலைவர் வாசுதேவன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனிடம், இந்த கொலை சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் கார்த்தியாயினி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதன்கிழமை இரவு தி.மு.க. கொடி கட்டிய காரில் வந்தவர்கள் கலி கண்ணனை அடித்து இழுத்துச் சென்றதாகவும், அந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் ஹரி விக்னேஷ் உள்பட 6 பேரை கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்காவிட்டால் பா.ஜ.க. சார்பில் போலீசாரை கண்டித்து அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும். கலி கண்ணன் ஏற்கனவே பலமுறை அவருக்கு செல்போனில் மிரட்டல் வந்ததாக திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து போலீசார் அப்போது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலை நடைபெற்று இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story