விக்கிரவாண்டி பகுதியில்குலைநோய் தாக்கிய நெற்பயிர்களை அதிகாரிகள் ஆய்வு


விக்கிரவாண்டி பகுதியில்குலைநோய் தாக்கிய நெற்பயிர்களை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி பகுதியில் குலைநோய் தாக்கிய நெற்பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

விழுப்புரம்


விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி பகுதியில் விவசாயிகள் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதில் நடவு செய்த நெற்பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில், தற்போது நெற் கதிர்கள் வந்துள்ளது.

இதில் சில பகுதிகளில், நெற்பயிரில் குலைநோய் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, மகசூல் பெற முடியாத நிலை ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. எனவே விவசாயிகள் கவலையடைந்து இருப்பதுடன், குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, விக்கிரவாண்டி வட்டார வேளாண்மை அலுவலர் திவ்ய பாரதி, உதவி வேளாண்மை அலுவலர் ராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் குலை நோயால் தாக்கப்பட்ட நெல் வயல்களை நேரில் பார்வையிட்டனர்.

இதில், பொன்னங் குப்பம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை ஆய்வு செய்த அதிகாரிகள், பயிருக்கு டிரைக்குளோசன் மருந்தை அடிக்க பரிந்துரை செய்து ஆலோசனை வழங்கினார்கள்.


Next Story