ஏற்காடு அடிவாரத்தில் ஓடையில் கிடந்த ரத்தக்கறை படிந்த அட்டை பெட்டி-போலீஸ், பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு


ஏற்காடு அடிவாரத்தில் ஓடையில் கிடந்த ரத்தக்கறை படிந்த அட்டை பெட்டி-போலீஸ், பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு
x

ஏற்காடு அடிவாரத்தில் ஓடையில் கிடந்த ரத்தக்கறை படிந்த அட்டை பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

கன்னங்குறிச்சி:

ஏற்காடு அடிவாரத்தில் தனியார் பள்ளிகள் உள்ள இடத்தில் ேநற்று மாலையில் மாணவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ரத்தக்கறையுடன் அட்டை பெட்டி ஒன்று அங்கு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்களும் அங்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் ஓடை அருகில் புதிதாக குழித்தோண்டி புதைத்த தடயமும் இருந்ததினால் போலீசார் மத்தியில் பரபரப்பு காணப்பட்டது.

இது குறித்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் முன்னிலையில் குழியை தோண்டி பார்த்தபோது நாய் அடக்கம் செய்து இருப்பது தெரிய வந்தது. இதனால் சகஜ நிலைக்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். இதில், அதே பகுதியில் வசித்து வரும் போலீஸ் அதிகாரியின் நாய் நேற்று மாலை விபத்துக்கு உள்ளானது. அதனை பெட்டியில் வைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் இறந்துவிட்டதால், அட்டை பெட்டியில் வைத்து அதை ஓடை பகுதிக்கு கொண்டு வந்து, நாயை அடக்கம் செய்து விட்டு அட்டைபெட்டியை அங்கு விட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story