அரூரில் புத்தக கண்காட்சி
அரூரில் புத்தக கண்காட்சி தொடங்கியது.
அரூர்:
அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்திய நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய அரூர் மையம் ஆகியவை சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில வழிகாட்டி குழு கவிஞர் ரவீந்திர பாரதி தலைமை தாங்கினார். தகடூர் புத்தக பேரவை செயலாளர் சிசுபாலன், இலக்கிய செயற்பாட்டாளர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு பெனாசிர் பாத்திமா புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். சம்பத்குமார் எம்.எல்.ஏ. முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் அம்மன் கிரானைட்ஸ் நிறுவனர் முத்து ராமசாமி, பேரூராட்சி தலைவர் இந்திராணி சூரியதனபால் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர். மேலும் 30 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் தமிழ் இலக்கியம், அறிவியல், வரலாறு, சிறுகதை உள்ளிட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் பிரபல எழுத்தாளர்கள் எழுதிய அரிய படைப்புகள் இந்த புத்தக கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.