குளிர்பானம் என நினைத்து பூச்சிமருந்து குடித்த சிறுவன் பலி


குளிர்பானம் என நினைத்து பூச்சிமருந்து குடித்த சிறுவன் பலி
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:46 PM GMT)

கடையம் அருகே குளிர்பானம் என நினைத்து பூச்சிமருந்து குடித்த சிறுவன் பலிபலியானான்.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே உள்ள முதலியார்பட்டியைச் சேர்ந்தவர் முகம்மது அமீன். இவரது மகன் முகம்மது பீர்மைதீன் (வயது 12). இவன் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மதியம் முகம்மது பீர்மைதீன் வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குளிர்பானம் என நினைத்து குடித்தான். இதை பார்த்த அவரது தாயார் சபுராள்பானு ஓடி வந்து தட்டினார். பின்னர் அவனை சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகம்மது பீர்மைதீன் நேற்று பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story