கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 15 Jun 2023 6:45 PM GMT (Updated: 15 Jun 2023 6:45 PM GMT)

பரங்கிப்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

பரங்கிப்பேட்டை அருகே தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த.கோவிலுக்குள் மர்மநபர்கள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றனர். இது குறித்த தகவலின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உண்டியலில் இருந்து ரூ.10 ஆயிரம் திருடு போயிருக்கும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருட்டு முயற்சி

இதேபோல் புவனகிரி அருகே கீரப்பாளையத்தில் உள்ள சேத்துக்கால் செல்லியம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருட முயன்றனர். ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த உண்டியலை கோவில் நிர்வாகிகள் திறந்து காணிக்கை பணத்தை எண்ணி எடுத்துச்சென்றனர். இதனால் உண்டியலில் பணம் இல்லாததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story