விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பம் உடைப்பு? தி.மு.க. கவுன்சிலரை கைது செய்யக்கோரி மறியல் நடந்ததால் பரபரப்பு


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பம் உடைப்பு? தி.மு.க. கவுன்சிலரை கைது செய்யக்கோரி மறியல் நடந்ததால் பரபரப்பு
x

விடுதலைசிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் உடைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் தி.மு.க.கவுன்சிலரை கைது செய்யக்கோரி விடுததலைசிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர்

அணைக்கட்டு

விடுதலைசிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் உடைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் தி.மு.க.கவுன்சிலரை கைது செய்யக்கோரி விடுததலைசிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்டது அகரம் ஊராட்சி. இங்குள்ள அகரம் பகுதியில் புதிய பயணிகள் நிழற்கூடம் கட்ட வேண்டுமென அகரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுதாகரன் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தார். அதன்பேரில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பயணிகளிடம் நிழற்கூடம் கட்டுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு இடையூறாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் அகற்றப்பட்டது. எனினும் அந்த கட்சியை சேர்ந்த ஒரு சிலர் அங்கு சென்று மீண்டும் கொடிக் கம்பத்தை நட்டு வைத்தனர்.இந்த கொடிக்கம்பமும் அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொடிக்கம்பத்தை அத்துமீறி உடைத்து எறிந்ததாக சுதாகரன் மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்யக்கோரி வேப்பங்குளம் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் கொடுத்தனர். அதன்பின் அவர்கள் அகரம் கூட்டு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் வேப்பங்குப்பம் போலீசார் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் வேலூர் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், மற்றும் அணைக்கட்டு தொகுதி செயலாளர் கோட்டி ஆகியோரும் தொண்டர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து சுதாகர் மீது வழக்குப் பதிவு செய்வதாக போலீசார் கூறியதன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

========


Next Story