கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x

சிவகங்கை அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை
சிவகங்கை அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை அருகே குமாரபட்டி கலியுகவரத அய்யனார், மந்தன கருப்பணசாமி கோவில் முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் குமாரப்பட்டி-இடையமேலூர் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 78 வண்டிகள் கலந்துகொண்டன. பெரியமாட்டு வண்டி, நடுமாட்டு வண்டி, சின்னமாட்டு வண்டி, பூஞ்சிட்டு வண்டி, தட்டான்சிட்டு வண்டி பந்தயம் என 5 பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கள்ளந்திரி நகுலன்சேதுபதி வண்டியும், 2-வது பரிசை குமாரபட்டி விஷால் கண்ணன் வண்டியும், 3-வது பரிசை மட்டங்கிபட்டி காவியா வண்டியும் பெற்றது. நடுமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை ஜெய்ஹிந்த்புரம் அக்னிமுருகன் வண்டியும், 2-வது பரிசை மேலூர் அழகன்கவுசிக் வண்டியும், 3-வது பரிசை நரசிங்கப்பட்டி மனோஜ் வண்டியும் பெற்றது.

பரிசுகள்

சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 21 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கூலையனூர் ராஜீவ்காந்தி வண்டியும், 2-வது பரிசை நெற்புகப்பட்டி சதீஷ்குமார் வண்டியும், 3-வது பரிசை கம்பம் பார்த்திபன் வண்டியும் பெற்றது. பூஞ்சிட்டு வண்டி பந்தயத்தில் 16 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை எர்னம்பட்டி பெருமாள்சாமி வண்டியும், 2-வது பரிசை வெள்ளரிப்பட்டி அழகுமலை வண்டியும், 3-வது பரிசை குமாரபட்டி ஜெயராஜ் வண்டியும் பெற்றது. இறுதியாக நடைபெற்ற தட்டான்சிட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை நாராயணதேவன்பட்டி சிவனேசன் வண்டியும், 2-வது பரிசை எரசை ராமையா மற்றும் ஒச்சதேவன்பட்டி பாலமுருகன் வண்டியும், 3-வது பரிசை அதிகரை வேங்கை வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.



Next Story