ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்தால்கோடை காலத்திலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதுஈரோடு மாநகராட்சி ஆணையாளர் தகவல்


ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்தால்கோடை காலத்திலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதுஈரோடு மாநகராட்சி ஆணையாளர் தகவல்
x

ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்தால் ஈரோடு மாநகராட்சியில் கோடை காலத்திலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு

ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்தால் ஈரோடு மாநகராட்சியில் கோடை காலத்திலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்து உள்ளார்.

குடிநீர் வினியோகம்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 1,000 கன அடி முதல் 1,500 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிரமம் ஏற்பட்டது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இந்தநிலையில் கோடை காலத்திலும் தட்டுப்பாடு இல்லாமல் மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தட்டுப்பாடு இல்லை

ஈரோடு மாநகராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் மூலமாக ஊராட்சிக்கோட்டையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மாநகராட்சி மக்கள் தொகை அடிப்படையில் தினமும் 89.12 மில்லியன் லிட்டர் தேவைப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலமாக சராசரியாக தினமும் 95 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான தலைமை நீரேற்று நிலையம் ஊராட்சிக்கோட்டை கட்டளை கதவணை மின் நிலையத்துக்கு மேல் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் நீரேற்று நிலையத்தில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை. கோடை காலத்தில் ஆற்றில் குறைவான தண்ணீர் வந்தாலும், நீரேற்று நிலையத்தில் உள்ள நீரெடுக்கும் கிணறு வற்றாத வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே கோடை காலத்திலும் தினமும் 95 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்க முடியும். இதனால் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

ஊராட்சிக்கோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ளதைபோல சூரியம்பாளையம் நீரேற்று நிலையம் மற்றும் வ.உ.சி. பூங்கா நீரேற்று நிலையத்திலும் மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக தனி டிரான்ஸ்பார்மர் அமைக்க மின்சார வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story