சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்கு சேகரிப்பு


சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்கு சேகரிப்பு
x

சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் தலைமையில் எம்.எல்.ஏக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்கு சேகரித்தார்கள்.

ஈரோடு

சோலார்

சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் தலைமையில் எம்.எல்.ஏக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்கு சேகரித்தார்கள்.

எதிர்பார்ப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து சூரம்பட்டி நால்ரோடு, எஸ்.கே.சி.வீதி, கிராமடை, அண்ணா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதியில் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் மணி(ஓமலூர்), ஜெயசங்கரன் (ஆத்தூர்), சித்ரா (ஏற்காடு), ராஜமுத்து (வீரபாண்டி), நல்லதம்பி (கெங்கவல்லி) உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் பலர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள். முன்னதாக சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் செயல்படுத்திய மேம்பாலம், அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களை கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறோம். பொதுமக்களும் இரட்டை இலைக்கு வாக்களிக்க நம்பிக்கையுடன் உள்ளனர். எப்போதும் ஆட்சி மாறினாலும் சரி மாறாவிட்டாலும் சரி பொதுமக்கள் மீது அ.தி.மு.க. வைத்துள்ள நம்பிக்கையும், அ.தி.மு.க. மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையும் வீண் போகாது. பொதுமக்களின் எதிர்பார்ப்பை அ.தி.மு.க. பூர்த்தி செய்யும்.

புதிய பார்முலா

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய பார்முலா ஒன்றை தி.மு.க.வினர் கையில் எடுத்துள்ளனர்.

வாக்காளர்களை அடைத்து வைப்பதும், இடைத்தேர்தலில் பண பலத்தை காட்டுவதும் பரிசுப் பொருட்கள் வழங்குவதுமாக அவர்கள் உள்ளனர். இதனால் மக்கள் தி.மு.க. மீது வெறுப்படைந்துள்ளனர். தி.மு.க.வினரின் புதிய பார்முலா பலிக்காது. அது அ.தி.மு.க.விற்கு சாதகமாக இருக்கும்.

அ.தி.மு.க.வின் கோட்டை என ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அமையும். பொதுமக்களும் நன்கு சிந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு பதிவு செய்வார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு அச்சாணியாக விளங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story