சிறப்பு மருத்துவ முகாம்


சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:47 PM GMT)

சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பில் வீடு தேடி தொற்றா நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சிங்கம்புணரி வட்டார மருத்துவ அலுவலர் நபீஷாபானு தலைமை தாங்கினார். மாவட்ட சித்த அலுவலர் (நோய் தொற்றா பிரிவு) சிவசங்கரி முன்னிலை வகித்தார். முகாமை சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை தலைவர் இந்தியன் செந்தில் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனைகள் நடைபெற்றன.

இந்த முகாம் சிங்கம்புணரி நகர் மற்றும் எஸ்.புதூர் பகுதியிலும் தொடர்ந்து நடைபெறும் என வட்டார மருத்துவ அலுவலர் நபீஷா பானு தெரிவித்தார். முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் எழில்மாறன், பிரீத்திவ் ராஜ், ருத்ரசேனா ஆகியோர் செய்திருந்தனர். இதில் பகுதி கிராம சுகாதார செவிலியர்கள், மங்கையர் கரசி மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story