மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; கொத்தனார் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்;   கொத்தனார் பலி
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:47 PM GMT)

முப்பந்தல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கொத்தனார் பரிதாபமாக பலியானார்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

முப்பந்தல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கொத்தனார் பரிதாபமாக பலியானார்.

கொத்தனார்

நெல்லை மாவட்டம் மாவடி மனையடிபுதூர் நாராயணசாமி கோவில்தெருவை சேர்ந்தவர் சேர்மராஜா (வயது 34), கொத்தனார். இவருக்கு திருமணமாகி மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர்.

கடந்த ஒரு மாதமாக சேர்மராஜா பழவூரில் வேலை செய்து வந்தார். சேர்மராஜாவின் மனைவியின் சொந்தஊர் தாழக்குடி அருகே உள்ள சந்தைவிளை தோப்பூர் ஆகும்.

கார் மோதியது

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சேர்மராஜா தோப்பூருக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் மீண்டும் பழவூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். முப்பந்தல் அருகே கண்ணுபொத்தை 4 வழிசாலை பகுதியில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சேர்மராஜா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சேர்மராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

டிரைவர் கைது

போலீசாரின் விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் கார் டிரைவரான நாகர்கோவில் புன்னைநகரை சேர்ந்த சகாய ததேயு ஜெயின்(26) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கொத்தனார் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story