மசினகுடியில் கர்நாடக மதுபாட்டில்களை விற்றவர் கைது


மசினகுடியில் கர்நாடக மதுபாட்டில்களை விற்றவர் கைது
x

மசினகுடியில் கர்நாடக மதுபாட்டில்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி

கூடலூர்

மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயன், தனிப்பிரிவு மகேஷ் குமார் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ஆச்சங்கரை பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு ஆசாமியை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவரிடம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 8 மது பாட்டில்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போது அதே பகுதியைச் சேர்ந்த ஜான் ஜோசப் (வயது 40) என தெரிய வந்தது. பின்னர் கர்நாடகாவில் இருந்து விற்பனைக்காக கடத்தி வந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மசினகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஜான் ஜோசப்பை கைது செய்தனர்.


Next Story