பட்டாசு வெடித்த 2 பேர் மீது வழக்கு


பட்டாசு வெடித்த 2 பேர் மீது வழக்கு
x

பட்டாசு வெடித்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் கோபுரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் பேன்சிரக பட்டாசுகளை சிலர் வெடித்த போது அதில் இருந்து வெளியேறிய நெருப்பு பொறி விழுந்து இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்து பெரும் விபத்தினை தவிர்த்தனர். இந்தநிலையில் கோவில் காவலாளி சிவக்குமார், சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் உறவினர்கள் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக பட்டாசு வெடித்த பராசக்தி காலனியை சேர்ந்த சதீஷ் என்கிற அகிலன் (வயது 23), பாலமுருகன் (26) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.Related Tags :
Next Story