மீன் வியாபாரியை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்கு


மீன் வியாபாரியை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 6:46 PM GMT)

தேனி அருகே மீன் வியாபாரியை தாக்கிய தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூரை சேர்ந்தவர் சித்துராஜ் (வயது 45). மீன் வியாபாரி. அவருடைய அண்ணன் மாரியப்பன் (47) அதே பகுதியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சித்துராஜிடம் மாரியப்பன் பணம் கேட்டுள்ளார். அப்போது தன்னிடம் பணம் இல்லை என்று அவர் கூறினார். இதனால், அவரும், அவருடைய மகன் சோனைகருப்பு (19) என்பவரும் சேர்ந்து சித்துராஜிடம் தகராறு செய்தனர். பின்னர் அவரை இரும்பு கம்பியால் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மாரியப்பன், சோனைகருப்பு ஆகிய 2 பேர் மீதும் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story