நடிகை குஷ்பு மீது முட்டை, தக்காளி வீசிய வழக்கு: சதாசிவம் எம்.எல்.ஏ. உள்பட 41 பேர் விடுதலை மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு


நடிகை குஷ்பு மீது முட்டை, தக்காளி வீசிய வழக்கு:  சதாசிவம் எம்.எல்.ஏ. உள்பட 41 பேர் விடுதலை  மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு
x

நடிகை குஷ்பு மீது முட்டை, தக்காளி வீசிய வழக்கில் சதாசிவம் எம்.எல்.ஏ. உள்பட 41 பேரை விடுதலை செய்து மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம்

மேட்டூர்,

மேட்டூர் கோர்ட்டுக்கு கடந்த 2005-ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்பாக நடிகை குஷ்பு வந்து விட்டு செல்லும் போது, அவர் மீது அழுகிய முட்டை, தக்காளி வீசியதாக கூறப்பட்டது. இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சதாசிவம் எம்.எல்.ஏ., பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் அறிவழகன், மேட்டூர் நகர செயலாளர் மதியழகன் உள்பட 41 பேர் மீது மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மேட்டூர் குற்றவியல் நீதிமன்ற எண் 1-ல் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு பத்மபிரியா குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் சதாசிவம் எம்.எல்.ஏ. உள்பட 41 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் பா.ம.க. சார்பில் வக்கீல்கள் முருகன், சதாசிவம் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.


Next Story