காவிரியில் வெள்ளப்பெருக்கு நெரிஞ்சிப்பேட்டையில் படகு போக்குவரத்து நிறுத்தம்; மின் உற்பத்தியும் பாதிப்பு


காவிரியில் வெள்ளப்பெருக்கு  நெரிஞ்சிப்பேட்டையில்   படகு போக்குவரத்து நிறுத்தம்;  மின் உற்பத்தியும் பாதிப்பு
x

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் நெரிஞ்சிப்பேட்டையில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

ஈரோடு

அம்மாபேட்டை

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் நெரிஞ்சிப்பேட்டையில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

படகு போக்குவரத்து நிறுத்தம்

கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி தண்ணீருக்கு மேல் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் காவிரிக்கரை ஓரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் படகு போக்குவரத்து இயங்கி வருகிறது. இந்தநிலையில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி நெரிஞ்சிப்பேட்டையில் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி

படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் இரு மாவட்ட பொதுமக்களும் நெரிஞ்சிப்பேட்டை கதவனை பாலத்தின் வழியாக இரு சக்கர வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். நெரிஞ்சிப்பேட்டையில் கதவணை மின் உற்பத்தி நிலையத்திலும் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காவிரி ஆற்றின் கரையோரத்தில் பொதுமக்கள் துணி துவைக்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story