மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கொடியேற்றம்


மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:46 PM GMT)

மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கொடியேற்றம் நடைபெற்றது

சிவகங்கை

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள ஹஜ்ரத் மேல்கரை பீர் சுல்தான் ஒலியுல்லா தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக மதியம் கந்தூரி விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து நாட்டிய குதிரைகள் நடனமாட, வான வேடிக்கைகளுடன் கொடி ரதம் மச்சுவீடு அம்மா தர்காவில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஹஜ்ரத் மேல்கரை பீர்சுல்தான் ஒலியுல்லா கொடிமரத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஏற்றப்பட்டது. இதில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர். மேலும் 2-ந் தேதி மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா நடைபெற உள்ளது.


Related Tags :
Next Story