கன்யா ரமேஷ் ஜூவல்லரியில் செயின் மேளா
விழுப்புரம் கன்யா ரமேஷ் ஜூவல்லரியில் செயின் மேளா நாளை வரை நடக்கிறது.
விழுப்புரம்,
விழுப்புரம் காமராஜர் வீதியில் அமைந்துள்ள கன்யா ரமேஷ் ஜூவல்லரியில் ஜூன் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை 3 நாட்கள் எண்ணற்ற ரகங்களில் ஏராளமான மாடல்களில் தங்க நகைளின் செயின் மேளா நடக்கிறது.
அதில் முதல் முறையாக 916 ஹால்மார்க் எச்.யு.ஐ.டி. முத்திரை பதித்த தங்க செயின்கள், காஸ்டிங் இம்போர்ட்டட் செயின்கள், ஆன்டிக் செயின்கள், கருகமணி, முத்து, பவளம், மரகதம், நவமணி செயின்கள் அனைத்தும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மேற்கண்ட நகைகளுக்கு சேதாரம் 4 முதல் 7 சதவீதம் மட்டும் விதிக்கப்படுகிறது. செய்கூலி இலவசம்.
இதுகுறித்து கன்யா ரமேஷ் ஜூவல்லரி உரிமையாளர் சி.கன்யாலால் கூறுகையில், நாங்கள் 57 ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பை பெற்று தரமான நகைகளையும், வெள்ளி நகைகளையும் நியாயமான விலையிலும், நிறைவான தரத்திலும் விற்பனை செய்கிறோம். ஒவ்வொரு தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகளுக்கு பிரத்யேக தனித்தனி பிரிவுகளும் உள்ளன. தமிழகத்திலேயே மிக குறைந்த சேதாரத்தில் ஹால்மார்க் நகைகள் விற்பனை செய்கிறோம். வெள்ளி நகைகளுக்கு டி.ஆர்., ஜே.ஜே. பிராண்டட் ஆகிய தனி ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி கொலுசுகள் மற்றும் வெள்ளி பாத்திரங்களுக்கு செய்கூலி இல்லை. இந்த செயின் மேளாவில் கலந்து கொண்டு எண்ணற்ற செயின் மாடல்களை கண்டுகளித்து வாங்கி பயனடையுங்கள் என்றார்.