விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா


விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா
x

ஏரல் ஆறுமுகமங்கலத்தில் விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா நடந்தது.

தூத்துக்குடி

எரல்:

ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மஹா கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, சிறப்பு அபிஷேகம், உச்சிகால தீபாராதனை, சிறப்பு அலங்கார தீபாராதனை, சுவாமி வீதி உலா வருதல் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா் நெல்லை விநாயகம் பிள்ளை, ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண்விநாயகர் தேவஸ்தான பூஜா ஸ்தானீகர் விக்னேஷ்வர பட்டர் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் மதியம் மாரமங்கலம் ராஜகோபால் குடும்பத்தினரும், இரவு தூத்துக்குடி ஆயிரத்தெண் விநாயகர் வழக்கறிஞர் பக்தர்கள் சார்பாகவும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story