விருத்தாசலம்மணலூர் செல்லியம்மன் கோவில் மாசி பெருவிழாதிரளான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்


விருத்தாசலம்மணலூர் செல்லியம்மன் கோவில் மாசி பெருவிழாதிரளான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:46 PM GMT)

விருத்தாசலம் மணலூர் செல்லியம்மன் கோவில் மாசி பெருவிழாவில் திரளான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலம் மணலூரில் பிடாரி செல்லியம்மன் என்ற வட பத்திர காளியம்மன் கோவிலில் மாசி பெருவிழா மற்றும் மகா சண்டி யாகம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து குறத்தி வேடம் அணிந்து குறி சொல்லும் நிகழ்ச்சியும், மணி முக்தாற்றில் மயானக்கொள்ளை திருவிழாவும் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக செடல் திருவிழா நேற்று காலை வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.

செடல் அணிந்து நேர்த்திக்கடன்

அதைத்தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 9 மணிக்கு மணிமுக்தா நதிக்கரையில் இருந்து சக்தி கரகம், 108 பால்குடம், அக்னி சட்டி, 60 அடி அலகு, விமான அலகு மற்றும் பறக்கும் செடல் போட்டுக்கொண்டு திரளான பக்தர்கள் வீதி உலாவாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

அப்போது பக்தர்கள் கொண்டு வந்த பால் குடங்களால் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அம்மன் வீதிஉலா நடைபெறுகிறது.

நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அம்மனுக்கு சந்தன நிராமணி நிகழ்ச்சியும், ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story