சென்னை-நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது- 2 மணி நேரத்தில் கைது செய்த போலீசாருக்கு பாராட்டு


சென்னை-நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது- 2 மணி நேரத்தில் கைது செய்த போலீசாருக்கு பாராட்டு
x

சென்னை-நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை


சென்னை-நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை-நெல்லை

நெல்லை மாவட்டம், குட்டம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 27). இவருடைய சகோதரர் சங்கர்கணேஷ் (17). இவர்கள் இருவரும், நேற்று முன்தினம் இரவு, சென்னையிலிருந்து நெல்லைக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மதுரை ரிங்ரோடு பகுதியில் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தங்களது செல்போன்களை பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது 2 மோட்டார் சைக்கிளில் ஒரு மர்மகும்பல் வந்தது. அந்த கும்பல், குமார் மற்றும் சங்கர்கணேசை கத்தியால் கொடூரமாக தாக்கிவிட்டு, அவர்களிடமிருந்த 2 செல்போன்களையும் அவர்கள் வந்த மோட்டார்சைக்கிளையும் பறித்து விட்டு தப்பி சென்றனர்.

4 பேர் கைது

இதுதொடர்பாக சிலைமான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும், இரவுரோந்து பணியில் இருந்த சிலைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம்பட்டவர்களை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்ததுடன், 2 மணி நேரத்திற்குள் அதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் வண்டியூரை சேர்ந்த ஜனார்த்தனன் (18), பாலவிஷ்ணு (25), அஜித்குமார் (21), வசந்தகுமார் (21) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இவர்கள் பல்வேறு பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

பாராட்டு

இந்த வழிப்பறி சம்பவம் நடந்த 2 மணி நேரத்திற்குள் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து பறித்துச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்ததோடு பாதிக்கப்பட்டவர்களை விரைவாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த சிலைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூனன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் பாராட்டினார்.

மேலும், மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடந்து இதுபோன்று சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.


Next Story