அமலாக்கத்துறையினரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த தலைவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி


அமலாக்கத்துறையினரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த தலைவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
x

அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

சென்னை,

தமிழக அரசின் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, கரூரில் உள்ள அவரது இல்லங்களில் மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

மேலும் தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனைக்கு பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சோதனை குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தெரிவித்திருந்தார். மேலும், அமலாக்கத்துறையினரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த தலைவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய டுவீட்டரில் கூறி இருப்பதாவது;

"தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் ஒன்றிய பாஜக அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட ஜனநாயக விரோத அமலாக்கத்துறை சோதனைக்கு, கடுமையாக கண்டனம் தெரிவித்த மல்லிகார்ஜூன கார்கே, சரத் பவார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி மற்றும் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் நன்றி" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story