முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: திருச்சியில் இன்று டிரோன்கள் பறக்க தடை


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: திருச்சியில் இன்று டிரோன்கள் பறக்க தடை
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தஞ்சை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அவர், இன்று காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார். பின்னர் இங்கிருந்து கார் மூலம் அவர் தஞ்சை செல்கிறார். தஞ்சாவூரில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலை 6.30 மணியளவில் புறப்பட்டு திருச்சிக்கு வரும் முதல்-அமைச்சர், இங்கிருந்து விமான மூலம் சென்னை செல்கிறார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு கருதி திருச்சி மாவட்டத்தில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு சென்று விட்டு மீண்டும் திருச்சிக்கு அவர் பயணம் செய்யும் சாலைகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story