பென்னாகரம் அருகே 6 வயது சிறுமி திடீர் சாவு


பென்னாகரம் அருகே 6 வயது சிறுமி திடீர் சாவு
x
தினத்தந்தி 22 Feb 2023 6:45 PM GMT (Updated: 22 Feb 2023 6:45 PM GMT)
தர்மபுரி

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே உள்ள மந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி கோகிலா. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஜஸ்மிதா என்ற மகள் இருந்தாள். மனவளர்ச்சி குன்றிய இந்த சிறுமிக்கு, பிறந்தது முதல் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பதறிய பெற்றோர், அவளை சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். 6 வயது சிறுமி திடீரென பலியான சம்பவம் குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story