பேரையூரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்


பேரையூரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2023 1:15 AM IST (Updated: 17 Jun 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

பேரையூரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

மதுரை

பேரையூர்

பேரையூர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் குருசாமி தலைமையில், செயல் அலுவலர் ஜெயதாரா முன்னிலையில், பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான கருத்துக்களை எடுத்துரைத்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மது மற்றும் போதை பழக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாத்திடும் பொருட்டு பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது.

குழந்தை திருமணம் தடுப்பு குறித்து பேரூராட்சிக்குட்பட்ட திருமண மண்டப உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் குழந்தைகள் தொடர்பான அனைத்து பிரச்சினைகள் குறித்து மாதந்தோறும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் நிலைகள், பள்ளி இடைநிற்றல், பள்ளி சேர்க்கை மற்றும் குழந்தைகள் இல்ல செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் அருள்குமார், பேரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story