சிதம்பராபுரம் முத்தாரம்மன் கோவிலில் 208 திருவிளக்கு பூஜை


சிதம்பராபுரம் முத்தாரம்மன் கோவிலில் 208 திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பராபுரம் முத்தாரம்மன் கோவிலில் 208 திருவிளக்கு பூஜை நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள சிதம்பராபுரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு தீர்த்தம் எடுத்து வருதல், வருசாபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவு 7மணிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் 208 திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பெண்கள் பங்கேற்று திருவிளக்கு ஏற்றி அம்பாளை வழிபட்டனர். தொடர்ந்து அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று காலையில் சிறப்பு பூஜை, வில்லிசை, பால்குடம், ஊர்வலம், அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், மாலையில் மஞ்சள் பெட்டி, ஊர்வலம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இரவு அம்மன் தீச்சட்டி ஏந்தி நகர் வலம் வருதல் நடைபெற்றது.


Next Story