கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை


கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை
x

குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்

குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை

உலக ரட்சகர் என்று கிறிஸ்தவ மக்களால் போற்றப்படும் இயேசு பிறந்த தினமான டிசம்பர்-25 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கிறிஸ்தவர்கள் நேற்று நள்ளிரவில் பட்டாசுகளை வெடித்து கிறிஸ்துமசை வரவேற்றனர்.

மேலும் பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று நள்ளிரவில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனையில் அந்தந்த பங்கு மக்கள் திரளாக கலந்துகொண்டனர். மேலும் ஒவ்வொரு ஆலயங்களும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.

நள்ளிரவு பிரார்த்தனை

நாகர்கோவில், கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் ஆயர் நசரேன் சூசை தலைமையில் நேற்று இரவு 11.30 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல குழித்துறை மறை மாவட்டத்தில் திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.

கடை வீதிகளில் மக்கள் கூட்டம்

முன்னதாக நேற்று நாகர்கோவில், மார்த்தாண்டம், குளச்சல் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள துணிக்கடைகள், பேக்கரி கடைகளில் கூட்டம் அலைமோதியது. நாகர்கோவில் மாநகரில் உள்ள பேக்கரி கடைகளில் கேக் விற்பனை படுஜோராக இருந்தது. முக்கிய சாலைகள் மற்றும் கடை வீதிகளிலும் மக்கள் கூட்ட அதிகளவில் காணப்பட்டன. இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story