விபத்துக்கள் ஏற்படுத்தும் மெகா பள்ளங்களை மூட பொதுமக்கள் கேரிக்கை


விபத்துக்கள் ஏற்படுத்தும் மெகா பள்ளங்களை மூட பொதுமக்கள் கேரிக்கை
x

விபத்துக்கள் ஏற்படுத்தும் மெகா பள்ளங்களை மூட பொதுமக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே தென் புறப்பகுதியில் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மு.புத்தூர் கிராமம். இந்த கிராமத்திலிருந்து முனியங்குறிச்சி செங்குளம் ஏரி வரை சாலையின் இரு புறமும் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டும், சிதிலமடைந்த கப்பி சாலையை தார் சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஊர் வழியாக பல்வேறு கிராமங்களில் இருந்து அரியலூருக்கு இருசக்கர வாகனங்கள் மூலம் காலையில் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு திரும்புகின்றனர். இது ஒரு முக்கியமான வழித்தடம் ஆகும். இந்நிலையில் மு.புத்துர் கிராமத்தில் தென்புற பகுதியில் உள்ள ஆபத்தான வளைவு பகுதியில் சாலை சரியாக சீரமைக்கப்படவில்லை. அதாவது வளைவு பகுதியில் கிணறுபோல் அபாயகரமான மிகப்பெரிய மெகா பள்ளம் உள்ளது. மேற்படி பள்ளத்தால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்கள் நிகழும் மோசமான சூழல் உள்ளது. எனவே ஆபத்தான வளைவு பகுதியில் உள்ள மெகா பள்ளத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story