செந்துறை அருகே இருதரப்பினர் இடையே மோதல்; 8 பேர் மீது வழக்கு


செந்துறை அருகே இருதரப்பினர் இடையே மோதல்; 8 பேர் மீது வழக்கு
x

செந்துறை அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சோழங்குடிக்காடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் போது மற்றொரு தரப்பினர் வசிக்கும் பகுதியில் பேனர் வைத்தது மற்றும் வெடி வெடித்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் இருபிரிவினரும் மோதிக்கொண்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் 8 பேர் மீது குவாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story