பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள்


பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள்
x

வாணாபுரத்தில் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளை ஊராட்சி தலைவர் வழங்கினார்

திருவண்ணாமலை

வாணாபுரம்

கலைஞரின் அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வாணாபுரம், குங்குலியநத்தம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி வாணாபுரத்தில் நடந்தது.

ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன் தலைமை தாங்கி அனைவருக்கும் தென்னங்கன்றுகளை வழங்கி பேசினார்.

அப்போது, தென்னங்கன்றுகளை பெயரளவில் வாங்கிச் செல்லக்கூடாது என்றும், அனைத்து வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் வைத்து அதனை பராமரித்து, அனைத்து தென்னங்கன்றுகளையும் வளர்த்துக் காட்ட வேண்டும் என்றும் கூறினார்.

இதில் 700 பேருக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஏழுமலை, வேளாண் உதவி இயக்குனர் ராம்பிரபு, வேளாண் அலுவலர் நிவேதா, துணை வேளாண் அலுவலர் அச்சுதன், உதவி வேளாண் அலுவலர்கள் ரமேஷ்கண்ணன், பயிர் அறுவடை பரிசோதகர் வல்லரசு, வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story