மின்கம்பம் மீது கல்லூரி பஸ் மோதல்


மின்கம்பம் மீது கல்லூரி பஸ் மோதல்
x

மின்கம்பம் மீது கல்லூரி பஸ் மோதியது.

அரியலூர்

கீழப்பழுவூர்:

பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பஸ்சில், அங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று மாலை அந்த கல்லூரி பஸ் மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாண்டரையான் கட்டளை பகுதியில் வந்துள்ளது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. இதனால் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பஸ்சில் இருந்த 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் டிரைவர் உள்ளிட்டோர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story