பாய் நாற்றங்கால் முறை குறித்து விவசாயிகளுக்கு கல்லூரி மாணவிகள் பயிற்சி
பாய் நாற்றங்கால் முறை குறித்து விவசாயிகளுக்கு கல்லூரி மாணவிகள் பயிற்சி அளித்தனர்
மதுரை
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே பண்னை குடியில் ஊரக பணி அனுபவ திட்டத்தின் கீழ் அதன் பணியில் ஈடுபட்டுள்ள மதுரை அரசு வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் அனுரிதா, அம்பிகா, கிராம விவசாயிகளுடன் ஒருங்கிணைந்து நடைமுறை கற்றலில் ஈடுபட்டனர். இவர்கள் நாற்றங்கால் அமைத்து அதன் மூலம் வரும் நாற்று நடுவதற்கு மாற்றாக பாய் நாற்றங்கால் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்கள். பாய் நாற்றங்கால் பயன்படுத்துவதால் பயிரிடும் செலவு மற்றும் கூலிஆட்கள் தேவை குறையும் என்று கூறினார்கள். இதில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story