மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 6 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 6 பேர் படுகாயம்
x

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

திருச்சி

தொட்டியம்:

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலையை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 43). இவர் தொட்டியம் அருகே கார்த்திகைப்பட்டியில் உள்ள தனது மைத்துனர் கார்த்திக் வீட்டிற்கு தனது மகள் துர்காதேவியுடன்(19) சென்றார். பின்னர் கார்த்திக்கின் குழந்தைகளான பிரித்திவிராஜ் (8), ஜனரஞ்சனி (3) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக மணமேடு அருகே திருச்சி-சேலம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அயினாப்பட்டியை சேர்ந்த சரவணன் (38), சக்திவேல் (28) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள், ராஜ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அந்த வழியாக வாகனங்களில் வந்த 6 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அந்த சென்றவர்கள் மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சரவணன் சக்திவேல் ஆகியோர் முசிறி தனியார் மருத்துவமனையிலும், ராஜ்குமார், ஜனரஞ்சனி ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். துர்காதேவி, பிரித்திவிராஜ் ஆகியோர் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் தொடர்பாக தொட்டியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story