கொ.ம.தே.க. நிர்வாகி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொ.ம.தே.க. நிர்வாகி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
x
தினத்தந்தி 28 Aug 2022 7:15 PM GMT (Updated: 28 Aug 2022 7:15 PM GMT)

கொ.ம.தே.க. நிர்வாகி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்:-

கொ.ம.தே.க. நிர்வாகி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொ.ம.தே.க. நிர்வாகி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி தலைவர் கவுதம் (வயது 31). பள்ளிபாளையம் அருகே வெப்படை பாதரை செட்டுக்காரன் தோட்டம் பகுதியில் வசித்து வந்த கவுதம் நிதி நிறுவனமும் நடத்தி வந்தார்.

கடந்த 22-ந் தேதி ஒரு கும்பல் கவுதமை காரில் கடத்தி கொலை செய்தது. இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் கவுதம் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

மேலும் 3 பேர் கைது

இதுதொடர்பாக கவுதமுடன் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த குணசேகரன், பிரகாஷ் மற்றும் தீபன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரித்ததில், கூலிப்படையை ஏவி ெகாலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கூலிப்படையினரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் கூலிப்படையை சேர்ந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த அரவிந்த் (24), முகேஷ் (30), கிருஷ்ணகிரியை சேர்ந்த தமிழரசன் (38) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story