மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூரில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடியில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்்,
திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூரில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடியில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
விலைவாசி உயர்வு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்திட வேண்டும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது.
திருப்பத்தூரில் பாரத ஸ்டேட் வங்கி எதிரேநடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகர செயலாளர் முருகன் தலைமை வகித்தார், துணைச் செயலாளர்கள் ஆர்.வெங்கடேசன் ஜெயபிரகாஷ், முன்னிலை வகித்தனர், ஒன்றிய பொருளாளர் மயில்வாகனன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் எம். சுந்தரேசன் தொடங்கி வைத்து பேசினார்.
சாலை மறியலால் திருப்பத்தூர் வாணியம்பாடி மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்த்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை திருப்பத்தூர் டவுன்போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி ெரயில் நிலையத்துக்கு மறியலில் ஈடுபட வந்த 18 பேரை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் கைது செய்தனர். கந்திலியில் போலீஸ் நிலையம் அருகே திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி சாலையில் ஒன்றிய செயலாளர் ரா.அண்ணாமலை தலைமையில் மாவட்ட குழு எம். நந்தி மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கந்திலி போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூரில் ெரயில் நிலையம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை-பெங்களூரு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 85 பேரை ஆம்பூர் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
நாட்டறம்பள்ளி
நாட்டறம்பள்ளி அருகே புதுப்பேட்டையில் ஒன்றிய செயலாளர் தீபா பூபதி தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் சாமி கண்ணு, ஒன்றிய துணை செயலாளர் முருகன் உள்பட சுமார் 50- க்கும் மேற்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.