தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

புகார் பெட்டி

ராமநாதபுரம்

நாய்கள் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் ஆா். எஸ். மங்கலம் தாலுகா ஆனந்தூா் ஊராட்சியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகாித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனங்களை துரத்துவதால் அடிக்கடி விபத்துகள் ஏற் படுகிறது. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனி, ஆனந்தூா்.

கழிவுநீா் கால்வாய் தூா்வாரப்படுமா ?

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் பொதுமக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரபடுவதில்லை. இதனால் கழிவுநீரானது தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருகிறது. கொசுக்கடியால் பொதுமக்கள் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். சுகாதார சீர்கேடு அடைந்துள்ள இப்பகுதியில் கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தபட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஆர்.எஸ்.மங்கலம்.

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் ஊராட்சி குதிரைமொழி கிராமத்தில் இருந்து பனை தொழிலாளர்கள் குடியிருப்பு செல்லும் சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து உள்ளன. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நிலவும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

பொதுமக்கள், மூக்கையூர்.

நிழற்குடை சீரமைக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்த நிழற்குடையின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி களுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் வெயில், மழையில் நிற்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.

மாரிமுத்து, வேதாளை.

பயணிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பயணிகளுக்கு போதிய அளவு இருக்கை வசதி இல்லை. இதனால் முதியோர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் தரையில் அமர்ந்தும், நின்று கொண்டும் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் கூடுதல் இருக்கை வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கீழக்கரை.


Next Story