தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

புகார் பெட்டி

மதுரை

ஆபத்தான மரம்

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சீல்நாயக்கன் கிராமம் பஸ் நிறுத்தம் அருகில் மரம் ஒன்று ஆபத்தான நிலையில் பட்டுப்போய் உள்ளது. இந்த மரத்தினால் விபத்து அபாயம் உள்ளது. எனவே இந்த பட்டுப்போன மரத்தினை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தரமாகலிங்கம், பேரையூர்.

நடவடிக்கை எடுப்பார்களா?

மதுரை மாவட்டம் வைகையில் பாயும் நீரையும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பாயும் காவிரி, குண்டாறுகளை இணைக்க வேண்டும். மழை காலங்களில் ஆறுகளில் பாயும் பல கனஅடிநீர் வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை தடுத்து ஆறுகளை இணைப்பதன் மூலம் தமிழகம் நீர்மிகை மாநிலமாக மாற்றி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். எனவே ஆறுகளை இணைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சுந்தர்ராஜ், மதுரை.

சாக்கடை வடிகால் அடைப்பு

மதுரை மாவட்டம் புது ஜெயில் ரோடு அழகரடி 1-வது தெரு பகுதியில் கடந்த ஒரு வாரமாக சாக்கடை நீர் நிரம்பி தெருவில் ஓடுகிறது. சாலையில் நடக்க, வாகனங்களில் பயணிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிஅடைகின்றனர். தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினேஷ்குமார், அழகரடி, மதுரை.

விபத்து அபாயம்

மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள சாலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு உள்ளதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைவதுடன், விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெற்றி, மதுரை.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கல்லம்பட்டி கிராமத்தில் சிறுஊரணி மற்றும் வடிகால் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்மாயில் நீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துபாண்டி, மேலூர்.


Next Story