உரம் ஒதுக்கீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்


உரம் ஒதுக்கீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்
x

உரம் ஒதுக்கீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்

திருவாரூர்

மன்னார்குடி:

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

காவிரி டெல்டாவில் தூர்வாருவதற்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்து மே மாதமே தூர்வாரும் பணியை தொடங்கியதை வரவேற்கிறோம். தூர்வரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதை வரவேற்கிறோம். கிராமங்களில் ஏரிகள், நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நீர்நிலைகளை நிரப்புவதற்கு முன்னுரிமை கொடுத்து தண்ணீர் பங்கீட்டை செயல்படுத்த வேண்டும். இருக்கும் தண்ணீரை கொண்டு சம்பா சாகுபடி பணிகளை தொடங்கும் வகையில் சிக்கனமாக பயன்படுத்த விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். கூட்டுறவு அமைப்புகள் மூலம் உரம் ஒதுக்கீடு செய்வதை அரசு கட்டாயமாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story