அவசர சிகிச்சை பிரிவு மேற்கூரைக்கு கான்கிரீட் போடும் பணி


அவசர சிகிச்சை பிரிவு மேற்கூரைக்கு கான்கிரீட் போடும் பணி
x
தினத்தந்தி 30 March 2023 6:45 PM GMT (Updated: 30 March 2023 6:46 PM GMT)

அவசர சிகிச்சை பிரிவு மேற்கூரைக்கு கான்கிரீட் போடும் பணி

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் பல்வேறு சிறப்பு பிரிவுகளுடன் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழக அரசு 7 படுக்கைகளுடன் கூடிய விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவை 8,200 சதுர அடியில் கட்ட சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் கட்டிடம் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து, விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி வருகின்றனர். தற்போது தரைத்தளம் கட்டும் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை மேற்கூரை அமைப்பதற்காக கான்கிரீட் போடும் பணி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது. இந்த பணிகள் குறிப்பிட்ட காலத்தில் நிறைவு பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story